இடுகைகள்

ப்ரோக்கோலியின் ஆரோக்கிய ரகசியங்கள்(BROCCOLI'S HEALTHY SECRETS IN TAMIL)

படம்
ப்ரோக்கோலி இது ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவாகும். விட்டமின் (சி,ஏ,கே) VITAMIN C A k)  மற்றும்  கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் (CALCIUM, ZINC, MAGNESIUM) போன்ற தாதுக்கள் அதிக நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஊட்டச்சத்து உணவாகும். உடல் எடை குறைக்கவும், நம் குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது. வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது வைட்டமின் ஏஉடன்  லுடின் மற்றும் ஜுயாக்சாந்தின் போன்றவை இருப்பதால் நம் கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை நோயின் தாக்கத்தைக் குறைக்க உதவும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். பற்களை பாதுகாக்கவும் உதவுகிறது. கர்ப்பிணி பெண்களின் கரு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து வகையான புற்று நோய். செல்களையும் வளர விடாமல் தடுக்கும். அடிக்கடி சமையலில் இந்த ப்ரோக்கோலியை பயன்படுத்தி வருவதால் மேற்கூறிய உடல் சம்பந்தமான நோய்களில் இருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ளலாம். ப்ரோக்கோலியை எவ்வாறு உணவில் பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்: ப்ரோக்கோலி சாலட்  ப்...

பாரம்பரிய எலும்பு-குழம்பு, வெஜ்-குழம்பு செய்முறை மற்றும் நன்மைகள் (BONE AND VEG BROTH IN TAMIL)

படம்
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகபடுத்த நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் தினமும் ஒரு சூப்பை உணவாக உட்கொள்ளும் போது எலும்புகளை அது வலுவாக்கும். பலவகையான சூப்புகள் உள்ளது.  சைவ உணவு முறையில் காய்கறிகளை கொண்டு சூப் தயார் செய்யலாம். ஒவ்வொரு காய்கறிகளிலும் தனி தனி சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் அனைத்து காய்கறிகளை கொண்டு சூப் தயார் செய்யலாம்.  தனி தனி காய்கறிகளை கொண்டும் சூப் தயார் செய்யலாம் அல்லது கலவையாக 2,3 காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம். அசைவ சூப்புகளை பொறுத்தவரை ஆட்டு எலும்பு மற்றும் கோழி கறி மற்றும் கோழி காலிலும் சூப் தயார் செய்யலாம். காய்கறி குழம்பு (VEG-BROTH) மற்றும் எலும்பு குழம்பு (BONE- BROTH) போன்று தயார் செய்து பருகலாம். வெஜ் ப்ராத் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: ‌கேரட் - 1 பீன்ஸ் - 5 or 6 ப்ரோக்கோலி - 100 g வெங்காயம் - 1 பூண்டு - 10-15 பல்  செலரி (சீமை கொத்தமல்லி) - 1 கைபிடி உப்பு தேவையான அளவு  செய்முறை : ஒரு பா த்திரத்தில் அனைத்தும் சேர்த்து ஒரு 1 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 45 நிமிடங்கள் கொதிக்க வைத்து உப்பு சேர்த்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்...

ஆட்டுக்கால் சூப் ரெசிபி (Mutton Soup recipe)

படம்
இன்றைய காலகட்டத்தில் பலவகையான சூப்புகள் இருந்தாலும் சூப் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஆட்டுக்கால் சூப் தான். காரணம் இதில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆட்டுக்கால் சூப்பின் நன்மைகள்: உடலுக்கு பலத்தையும் ஆற்றலையும் தரும் நோய் எதிர்பு சக்தி பெருகும்  மூட்டு எலும்புகளை வலுவாக்கும் இதில், கொலாஜன், க்ளைசமின், காண்ட்ராய்டின் சல்பேட், குளுட்டோமைன், ப்ரோலின் போன்ற எலும்புகளை வலுவாக்கும் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளது.  இந்த ஆட்டுக்கால் சூப்பை அடிக்கடி உட்கொள்ளும் போது எலும்புகளை பாதுகாப்பதோடு வீக்கத்தை குறைக்கும் ஆஸ்டியோபோரோசிஸ்,கீழ்வாதம் போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.  இதில் குளுட்டமைன் இருப்பதால் குடல் ஆரோக்கியம் குறிப்பாக செரிமான மண்டலத்தை சுத்தம் செய்யவும் குடல் அழற்சி பிரச்சினையை குறைக்கவும் உதவுகிறது. நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் குறைந்த கலோரி ஊட்டச்சத்துகள் உள்ளதால் எடையை குறைக்கவும் செய்கிறது.  ஆட்டுக்கால் சூப்பில் கொலாஜன் சத்து நிறைந்து காணப்படுவதால் தோல், முடி, நகங்களை பாதுகாக்கும், பல தரப்பட்ட நோய் அழற்சியை குறைக்கவும் செய்கிறது.  ஆட...

இருதயத்தை பாதுகாக்கும் பாரம்பரிய உணவுகள் (Foods That Protect The Heart in Tamil)

படம்
நமது உடலின் மிக முக்கிய உருப்பான இருதயத்திற்கு நவீன மருத்துவம் பல்வேறு சிகிச்சைகள் வழங்கினாலும், இயற்கை நமக்கு பலகாலமாக இருதயத்தை பாதுகாக்க பாரம்பரிய உணவு முறைகளை வழங்கி உள்ளது இரத்த அழுத்தத்தை குறைப்பதாலும் மற்றும் கொழுப்பை குறைப்பததன் மூலமும் இருதய துடிப்பை சீராக வைக்க உதவுகிறது இருதயத்தை பாதுகாக்கும் பாரம்பரிய உணவு மற்றும் தயாரிக்கும் வழிகளை காணலாம் 1. பூண்டு (Garlic) நன்மை : இரத்த அழுத்தத்தை குறைக்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். பாலுடன் பூண்டு (Garlic with Milk) தேவையான பொருட்கள்:    பால் – 1 கப் பூண்டு – 5–6 பல் (நறுக்கியது)  பனங்கற்கண்டு 1 ஸ்பூன்  மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்  தயாரிப்பு முறை : பாலுடன் நறுக்கிய பூண்டு மற்றும் மஞ்சள் சேர்த்து 5–7 நிமிடம் மெதுவாக கொதிக்க விடவும். பனங்கற்கண்டு சேர்த்து இளம் சூட்டில் குடிக்கலாம். நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த அழுத்த கட்டுப்பாடு 2. மஞ்சள் (Turmeric) நன்மை: மஞ்சளில் உள்ள குர்க்குமின் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்தது, இதயத்தை பாதுகாக்கும். பயன்பாடு: மஞ்சள் பால் (turmer...